அளவுக்கு அதிகம்: மாணவர்களுக்கான தன்னுதவி புத்தகம்
மாணவர்கள் உற்சாகமாக கல்வி கற்பதற்கு இப்புத்தகம் வழி காட்டும். நாம் புத்திச்சாலிதனத்தை மதிப்பெண்களுடன் இணைத்து வைத்துள்ளோம். கல்வி புதிய விஷயங்களை கற்பதற்கு என்ற நிலை மாறி மதிப்பெண்களையே நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இப்புத்தகம் மாணவர்களை கல்வி கற்க ஊக்கப்படுத்துவதாகவும், அவர்களது திறமைகளோடு அவர்களை இணைத்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது. இது தானாகவே நல்ல மதிப்பெண்களை ஈட்டித் தரும்.
நான் மாணவியாக செய்த தவறுகளையும், அதை எவ்வாறு திருத்திக்கொண்டேன் என்ற அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். தன்னம்பிக்கை இல்லாமல் இருந்த நான் என்னை எப்படி படிப்படியாக வளர்த்துக் கொண்டேன் என்பதை விவரித்துள்ளேன். அதேபோல் மாணவர்களும் தங்கள் திறமைகளை வெளிகாட்டி வாழ்வில் மேலும், மேலும் உயர பரிந்துரைகளை பகிர்ந்துள்ளேன். இது அவர்களே அறியாத தங்களின் ஆற்றலை வெளிப்படுத்த உதவும்.
இப்புத்தகம் மாணவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் போதுமானதை விட அளவுக்கு அதிமாகவே இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
இப்புத்தகம் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் எல்லா துறையும் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்றது.